9/23/2011

பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்ய

நேற்று பேஸ்புக்கின் F8 நடைபெற்றது இதில் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.
 • இதற்க்கு முதலில் Facebook Developer இந்த லிங்கில் செல்லவும். 
 • உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு விண்டோ வந்தால் அதில் உள்ள Allow கொடுத்து உள்ளே செல்லவும். 
 • இனி கீழே ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டு காட்டி இருக்கும் படி செய்யுங்கள். 
 • உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் App Display Name, App namespace போன்ற இரு பகுதி இருக்கும் அதில் உங்களுக்கு தோன்றிய பெயரை கொடுக்கவும். அதில் App Namespace என்ற இடத்தில நீங்கள் கொடுக்கும் பெயர் Available என்று பச்சை நிறத்தில் வரவேண்டும். 

 • அடுத்து Security Check என்ற பகுதியில் verification code நிரப்ப சொல்லும் அதை சரியாக கொடுத்து submit பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுடையை App ரெடியாகி விடும். 
 • அந்த விண்டோவில் உள்ள Open Graph என்ற லிங்கை அழுத்தவும். 

 • அதில் உள்ள சிறு கட்டங்களில் ஏதோ ஒன்றை கொடுத்து Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.அதில் கடைசியில் உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும். 
 • இதற்க்கு அடுத்து ஓபன் ஆகும் இரண்டு விண்டோக்களிலும் இதே பட்டனை அழுத்தவும். முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். 

 • மேலே இருப்பதை போல விண்டோ வந்தால் இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சரியே. இப்பொழுது உங்கள் பேஸ்புக்கின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள். 
 • உங்கள் பேஸ்புக்கின் புரொபைல்பக்கத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி இருப்பதை காண்பீர்கள். 
 • அந்த பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே உங்களின் பேஸ்புக் கணக்கு புதிய தோற்றத்தில் மாறிவிடும். சில கூடுதல் வசதிகளையும் பெறலாம். 

 • இந்த புதிய தோற்றம் Developer பிரிவில் சேர்ந்துள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு பழைய தோற்றம் தான் தெரியும். 
ஏற்கனவே பதிவு பெரியதாகி விட்டதால் இதில் உள்ள வசதிகள், எப்படி உபயோகிப்பது போன்ற தகவல்களை அடுத்த பதிவில் பாருங்கள். 

இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பலரையும் சென்றடைய கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும்.

Thanks - How to activate New Facebook design Timeline Now23 Responses to “பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்ய”

Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 10:51 am

ஆஹா, கூகுள் + ஐக் கண்டதும், ஃபேஸ்புக்குல அள்ளி அள்ளிக் குடுக்குறாங்களே! நமக்கு நல்லதுதான்!

அப்புறம் தமிழ்மணத்துல சப்மிட் பண்ணி ஃபர்ஸ்டு ஓட்டுப் போட்டிருக்கேன்!


விக்கியுலகம் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 11:11 am

என்னக்கு தான்யா ஒர்க்காக மாட்டேங்குது....பகிர்வுக்கு நன்றி!


NAAI-NAKKS சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 11:42 am

Thanks for shareing !!!!


stalin சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 11:55 am

நல்லா இருக்கு சார் ...........


ஒரே உலாவியில் ஒன்றுக்கும் மேற்பட்ட லாகின் -அனைத்து


NIZAMUDEEN சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 12:03 pm

தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.


HajasreeN சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 12:40 pm

google FB fight la namakku thaan laabam


MHM Nimzath சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 12:49 pm

SUPER


Agape Tamil Writer சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 1:03 pm

அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி


சி.பி.செந்தில்குமார் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 2:03 pm

பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி


தங்கம்பழனி சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 2:09 pm

thanks..


கந்தசாமி. சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 2:18 pm

கொஞ்சம் குழப்பமாய் இருக்கு ...


வேங்கட ஸ்ரீனிவாசன் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 3:33 pm

நன்றி. முகநூலில் ஏற்றி/மாற்றிவிட்டேன்.


Mahan.Thamesh சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 3:33 pm

பகிர்வுக்கு நன்றி சகோ


FOOD சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 3:49 pm

என்றும் போல் இன்றும் பயனுள்ள பகிர்வு. நன்றி.


S.Menaga சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 3:58 pm

thxs for sharing sasi!!


SR சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 5:09 pm

Thanks


# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 5:16 pm

நல்லது...


ramalingam சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 6:43 pm

கிடைத்து விட்டது. எதையும் சூட்டோடு சூடாகக் கொடுக்கும் உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது.


anbu சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 6:47 pm

மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள், பணி தொடரட்டும். நன்றி.


ரெவெரி சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 6:56 pm

வீட்டுக்கு போனவுடனே செய்திற வேண்டியது தான்...


பாரத்... பாரதி... சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 11:31 pm

புதிய தோற்றத்தினை பகிர்ந்தமைக்கு நன்றிகள்..


பாரத்... பாரதி... சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 11:32 pm

இப்பொழுதெல்லாம் டுடே லொள்ளு வருவதில்லையே? நேரமின்மையா?


சிநேகிதி சொன்னது…
24 செப்டெம்ப்ர், 2011 12:18 am

பகிர்வுக்கு நன்றி