9/22/2011

குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights

எப்படித்தான் யோசிக்கிராங்களோ இந்த கூகுள் காரங்க தினமும் ஏதாவது ஒரு புது புது வசதியை அறிமுக படுத்திகிட்டே இருக்காங்க. இவுங்க வெளியிட்டுள்ள வசதிகளை பட்டியல் போடணும்னா இந்த பதிவு பத்தாது. இதையெல்லாம் மீறி இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். இந்த வசதியின் மூலம் விமான டிக்கெட்டுக்களின் விவரங்கள் விமானம் புறப்படும் நேரம், பயணிக்கும் கால அளவு நம் பட்ஜெட்டிற்கு ஏற்ற விலைப்பட்டியல் என அனைத்தையும் பார்த்து கொள்ளலாம்.

முதலில் இந்த தளம் Google Flights சென்று நீங்கள் கிளம்பும் இடத்தையும் சென்று சேரவேண்டிய இடத்தையும் தேர்வு செய்யுங்கள். இவைகளை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு அனைத்து விவரங்களும் காட்டும். 

இதில் உள்ள விவரங்கள் உங்களுக்கு தேவையான வகையில் மாற்றி கொடுத்து விமானங்களை தேர்வு செய்யலாம். நீங்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகைக்கு ஏற்ப உள்ள விமானங்கள் உங்களுக்கு பட்டியலில் தெரியும்.


முக்கியமான விஷயம் இந்த சேவை தற்பொழுது அமெரிக்கா நகரங்களுக்கு மட்டும் தான் அளிக்கப்பட்டுள்ளது. இதன் வரவேற்ப்பை பொருத்து கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கும் இந்த சேவை வரலாம். 

Tech Shortly10 Responses to “குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights”

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 7:37 pm

தகவலுக்கு நன்றி .


தமிழ்வாசி - Prakash சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 8:04 pm

ரைட்டு....


விக்கியுலகம் சொன்னது…
22 செப்டெம்ப்ர், 2011 8:50 pm

நன்றி!


ரெவெரி சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 12:47 am

தகவலுக்கு நன்றி நண்பரே...


Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 4:23 am

நல்ல தகவல்! நல்ல ஐடியா!


நிரூபன் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 8:43 am

இனிய காலை வணக்கம் பாஸ்,

அசத்தலான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க.


தமிழ்நுட்பம் சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 9:15 am

Online Works For All said :September 21, 2011 3:36 PM
பயனுள்ள அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com


Kannan சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 10:38 am

உங்கள் தகவலுக்கு நன்றி...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com


கிருஷ்ணமூர்த்தி சொன்னது…
23 செப்டெம்ப்ர், 2011 6:57 pm

பாத்திங்களா கடைசியில புள்ளி வைத்து விட்டீர்களே அமெரிக்காவுக்குன்னு .
போங்க சார்


ronald சொன்னது…
24 செப்டெம்ப்ர், 2011 4:33 pm

அருமையான தகவல் நன்றி .