9/21/2011

மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?

இணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில்,யாகூ,ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்புகிறோம். ஆனால் நம்முடைய ஈமெயில் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்புவது எப்படி என பார்ப்போம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம், மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மெயில் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.

Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகி கீழே இருப்பதை போல இருக்கும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.

Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மெயில் அனுப்பி விடலாம்.

இந்த முறையில் அனுப்பப்படும் ஈமெயில்கள் உடனே சென்று சேராது. அதிகபட்சம் 12 மணி நேரம் கூட ஆகலாம். 

Note: இதன் மூலம் அனுப்பப்படும் மெயில்களில் உங்கள் ஈமெயில் ஐடியை தெரியாமல் மறைத்தாலும் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் சேமிக்கப்படும். ஆகவே விபரீதமாக எந்த மெயிலும் அனுப்ப வேண்டாம். தண்டனையில் மாட்டி கொள்வீர்கள்.Tech Shortly19 Responses to “மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?”

தமிழ்வாசி - Prakash சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 6:14 am

காலை வணக்கம் மாப்ளே.


தமிழ்வாசி - Prakash சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 6:19 am

இம்முறையால் தவறான கண்ணோட்டமுள்ள மெயில் வர வாய்ப்பு உள்ளதா?


எல் கே சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 6:39 am

சசி, நீங்கள் நல்ல எண்ணத்துடன் இதை வெளியிட்டாலும் தவறாகப் பயன்படுதுபவர்களே அதிகம் இருப்பார்கள்.


நிரூபன் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 6:58 am

இனிய காலை வணக்கம் பாஸ்..

என்ன வெளியூர்ப் பயணமா?
இவ்வளோ சீக்கிரமா பதிவு.


நிரூபன் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 6:59 am

ஐடியா ஓக்கே தான்,
இனிமேல் நம்மவர்கள் பலர் இந்த வசதியினைத் துஷ்பிரயோகம் செய்யாதிருந்தால் சந்தோசமே.


நிரூபன் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 7:01 am

Note: இதன் மூலம் அனுப்பப்படும் மெயில்களில் உங்கள் ஈமெயில் ஐடியை தெரியாமல் மறைத்தாலும் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் சேமிக்கப்படும். ஆகவே விபரீதமாக எந்த மெயிலும் அனுப்ப வேண்டாம். தண்டனையில் மாட்டி கொள்வீர்கள்.//

ஆகா..கூடவே ஒரு எச்சரிக்கை மெசேஜ் போட்டிருக்கிறீங்களே..

நன்று.


நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 7:22 am

ரைட்டு.


சம்பத்குமார் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 7:25 am

பகிர்விற்க்கு மிக்க நன்றி நண்பரே..

யாரும் misuse செய்யாமல் இருந்தால் சரிதான்

நன்றியுடன்
சம்பத்குமார்


யானைகுட்டி @ ஞானேந்திரன் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 8:04 am

அருமையான தகவல்கள் .
நன்றி !!
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!


தமிழ் உதயம் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 9:12 am

விளையாட்டு வினையாகாமல் இருந்தால் சரி.


NAAI-NAKKS சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 9:28 am

Nanri nanbarey !!!


விக்கியுலகம் சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 9:34 am

மாப்ள ஆனாலும் உனக்கு நக்கல் அதிகமா பூடிச்சி....கையில துப்பாக்கி கொடுத்துட்டு சுடாதேங்கர ஹிஹி....பகிர்வுக்கு நன்றி!


!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 10:51 am

இந்த மாதிரி தகவல்களை தெரியப் படுத்தாமல் இருப்பதே நல்லது..


இந்திரா சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 10:55 am

சும்மாவே அனானி மெயிலும் அனானி பின்னூட்டமும் பட்டைய கிளப்புது.. இதுல நீங்க வேற க்ளாஸ் நடத்துறீங்களா???? சரியாப் போச்சு போங்க.


curesure4u சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 11:10 am

ஏற்கனவே பதில் சொல்லமுடியாமல் திண்டாடிறேன் ..ஒரு நாளைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள் ..intha ஒரு தகவலை வேற தர venumaa சசி


NIZAMUDEEN சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 12:22 pm

எச்சரிக்கை கொடுத்துள்ளது
நல்லது.


MHM Nimzath சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 1:32 pm

பயனுள்ள புதிய தகவல்.

Screen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது


செங்கோவி சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 4:55 pm

நம்ம ஆட்கள் ஏற்கனவே விவகாரமானவங்க..இதை வேற சொல்லிக்கொடுக்கணுமா சசி...


Ram சொன்னது…
21 செப்டெம்ப்ர், 2011 7:16 pm

நண்பர் சசிக்கு, இந்த பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை... தயவுசெய்து இதுபோன்ற விசயங்களை பதிவாக்கி படிப்பவர்களை தீய வழிக்கு அனுப்பாதீர்கள்... எக்காரணம் கொண்டும் ISP IPயை மறைக்க முடியாது...