8/04/2011

இணைய வரலாற்றில் கூகுள் பிளசின் மெகா சாதனை # அதிர்ச்சி ரிப்போர்ட்

கூகுள் பிளஸ் இணையம் முழுவதும் ஒரே பேச்சு இதை பற்றி தான். பேஸ்புக்கை கட்டுபடுத்த சரியான நேரத்தில் கூகுள் வெளியிட்ட இந்த சமூக தளமான கூகுள் பிளஸ் வெளியிட்ட குறைந்த நாட்களிலேயே 25 மில்லியன் வாசகர்களை பெற்று இணையத்தில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இதற்குமுன் குறைந்த நாட்களிலேயே அதிக வாசகர்களை கவர்ந்த தளமாக Myspace தளம் இருந்தது. அந்த சாதனையை இப்பொழுது கூகுள் பிளஸ் பெற்றுள்ளது.  இந்த வளர்ச்சியை பார்த்து மற்ற சமூக தளங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன


கூகுள் பிளஸ் ஜூன் மாதம் கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சிப்படி கடந்த ஜூலை மாதம் 25 தேதியின் படி இந்த தளத்தின் வாசகர்கள் 25 மில்லியன் இலக்கை எட்டி விட்டதாக பிரபல Comstore நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது சரியாக சொல்லவேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 1 மில்லியன் வாசகர்கள் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது.  இது இணைய வரலாற்றில் ஒரு மகத்தான சாதனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

பேஸ்புக் தளம் 25 மில்லியன் வாசகர்களை அடைய சுமார் 3 ஆண்டுகள் எடுத்து கொண்டதாகவும் , ட்விட்டர் தளம் 30 மாதங்களை எடுத்து கொண்டதாகவும் Comstore நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. மற்றொரு சமூக தளமான Myspace தளம் ட்விட்டர்,பேஸ்புக்கை விட விரைவாக(2 வருடங்களுக்கு குறைவாக) இந்த இலக்கை அடைந்ததாம். ஆனால் வெளியிட்ட ஒரே மாதத்தில் இத்தகைய வளர்ச்சியை எந்த இணையதளமும் இதுவரை எட்டியதில்லை என கூகுள் பிளசுக்கு புகழாரம் சூட்டியுள்ளது. 

கூகுள் பிளஸ் வாடிக்கையாளர்கள் நாடுகளின் வரிசைப்படி:

அமெரிக்கா- 6 மில்லியன் வாசகர்கள் 
இந்தியா - 3.6 மில்லியன் 
கனடா(UK) - 1 மில்லியன் 
ஜெர்மனி - 920,000
பிரேசில் - 180,000
பிரான்ஸ் - 500,000
தைவான் - 500,000 

என்று பல நாடுகளில் வாசகர்களின் வட்டம் பரந்து காணப்படுகிறது. இன்னும் இந்த கூகுள் பிளஸ் தளம் சோதனை பதிப்பில் தான் உள்ளது என்பது இன்னொரு அதிர்ச்சி அளிக்கும்  செய்தி இன்னும் முழு பதிப்பில் வந்தால் என்னென்ன சாதனைகளை நிகழ்த்த போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

நேரம் இருந்தா என்னையும் கொஞ்சம் கவனிச்சுட்டு போங்க - விளம்பரம் 15 Responses to “இணைய வரலாற்றில் கூகுள் பிளசின் மெகா சாதனை # அதிர்ச்சி ரிப்போர்ட்”

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 6:07 pm

அமாம் சசி.. கூகிள் பிளஸ் கலக்குது..


கூழாங் கற்கள் சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 6:08 pm

பதிவுக்கு நன்றி ...
உங்கள் தளத்தை எங்களது தமிழ் வண்ணம் திரட்டியில் இணையுத்துள்ளேன்


Lakshmi சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 6:25 pm

ஆமாங்க உணமை தான்.


ஆர்.சண்முகம் சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 7:27 pm

நல்ல பகிர்வு நண்பரே...


ஆர்.சண்முகம் சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 7:28 pm

ப்ரீயா இருந்த நம்ம கடைக்கு வாங்களே டீ வடை எல்லாம் சூடா இருக்கு சாப்பிட்டுகிட்டே பேசலாம்...........


M.R சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 8:00 pm

கூகிளின் கலக்கல்

இது தொடரும்


தமிழ் உதயம் சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 8:33 pm

கூகுளுக்கு சாதனை என்பது புதிதா.


ஷீ-நிசி சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 9:13 pm

ஜி+ இன்னும் மேம்பட வேண்டும்... சில நேரங்களில் ரொம்ப ஸ்லோவாகவும் இருக்கு!


மாய உலகம் சொன்னது…
4 ஆகஸ்ட், 2011 10:46 pm

கலக்கலான செய்தி


தமிழ்வாசி - Prakash சொன்னது…
5 ஆகஸ்ட், 2011 12:48 am

கலக்கல் ப்ளஸ்


Mahan.Thamesh சொன்னது…
5 ஆகஸ்ட், 2011 3:29 am

படு வேகமான முன்னேற்றம் தான் சசி அண்ணே


கிருஷ்ணன் வைத்தியநாதன் சொன்னது…
5 ஆகஸ்ட், 2011 10:19 am

நண்பா எல்லாம் ஏமாற்று போலவே தோன்றுது. என் நண்பர்கள் யாரும் ஒரு அப்டேட்ஸ் கூட கூகிள் ப்ளஸில் செய்வது இல்லை. எல்லாரும் இன்னும் facebookla தான் அப்டேட்ஸ் செய்கிறார்கள். எல்லாரும் ப்ளஸில் சேர்ந்ததோட சரி. இப்படி தான் buzzkkum wavekkum புருடா விட்டது கூகிள்.


விக்கியுலகம் சொன்னது…
5 ஆகஸ்ட், 2011 1:00 pm

கலக்கலான செய்தி!


நவ்ஸாத் சொன்னது…
5 ஆகஸ்ட், 2011 1:49 pm

கூகிள் எப்பவுமே கலக்கல் தான் ! !


Tamil 121 சொன்னது…
6 ஆகஸ்ட், 2011 10:38 pm

ஏற்கனவே கூகுள் வாசகர்கள்தான் இதில் இணைந்திருக்கிறார்கள். புதிய பயனாளர் இல்லை. அதோடு கூகுள் பிளஸ் பற்றிய செய்திகள் சூடு பறந்ததால் அதிக பேர் இணைந்ததாகவும், அதன் பயனாளர் எண்ணிக்கை தற்போது படுவேகமாக சரிந்து வருவதாகவும் சொல்கிறார்களே!